» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகளின் முறையற்ற செயல் : முருக பக்தர்கள் குமுறல்!

திங்கள் 1, செப்டம்பர் 2025 10:48:43 AM (IST)



திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன  டிக்கெட் விற்பனையை முறைப்படுத்தவும் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலர்களை நியமிக்கவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி கோவில் நிர்வாக அதிகாரிகள் முறையற்ற செயலில் ஈடுபட்டு, பக்தர்களை குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்திட உதவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறும்போது, "இது போன்ற நிகழ்வுகளால் திருக்கோவில் வரும் முருக பக்தர்கள் இந்துக்கள் மன குமுறல் அடைகின்றனர். இந்து மக்களின் முருக பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் செயல்படுகிறது. பொதுமக்களாகிய நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் உங்களை நம்பி தான்  பயணிக்கிறோம். 

திருக்கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சண்முக விலாஸ் பாதையை திறந்து விட்டு பணம் கொடுப்போருக்கும் அதிகாரத்தில் இருப்பவருக்கும் கதவை திறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கடவுள் முன் அனைவரும் சமம் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வே்ணடும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

குமார்.Sep 1, 2025 - 02:49:28 PM | Posted IP 104.2*****

சண்முகவிலாசம் தடுப்பு கம்பிகளை நீக்கி விட்டு பழைய முறையை கடைப்பிடித்தாலே போதும் இதற்கு தீர்வு கிடைக்கும்.குமார் ஸ்ரீவைகுண்டம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory