» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், 21.08.2025 அன்று ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகளை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ததின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுகத்திலிருந்து இத்தனை அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகள் ஒரே கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையின் மூலம் 25.03.2025 அன்று 75 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகத்தின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த இயந்திர சரக்குக் கையாளுதலில, துறைமுகம் ஒரு புதிய முன்னேற்றக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க ஏற்றுமதி நிகழ்வின் மூலம் துறைமுகம் இந்த நிதியாண்டில் (2025-26) ஆகஸ்ட் 21- அன்று வரை 1,158 காற்றாலை இறகுகளை கையாண்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின்(2024-25) ஆகஸ்ட் மாதம் வரை கையாளப்பட்ட 1,099 காற்றாலை இறகுகளை விட 5மூ அதிகமாகும்.
‘வெஸ்டாஸ்’ நிறுவனமத்த்pனால் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த காற்றாலை இறகுகள் BBC Santiago என்ற கப்பலின் மூலம் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சரக்கு ஏற்றுமதி, கூடுதல் தளம்-1-ல் Additional Berth-I) ‘Imcola’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் இரண்டு நகரும் பளுதூக்கி இயந்திரங்களின் (HMC) மூலமும், கப்பல் இயந்திரங்களின் மூலமும் பாதுகாப்பாகவும் திறமையாகவும் கையாளப்பட்டது.
இந்த காற்றாலை இறகுகளின் கடல் வழி போக்குவரத்திற்கான தேவையினை ஆயநசளம மற்றும் சாலை வழி போக்குவரத்திற்கான தேவையினை NTC நிறுவனங்கள் வழங்கின. கப்பல் முகவராக ‘Marcons Ship Management Pvt. Ltd மற்றும் காற்றாலை இறகுகளை ஏற்ற மற்றும் இறக்கும் பணிக்கான ‘ஸ்டீவ்டோர்’ ஆக ‘Pearl Shipping & Chartering’ நிறுவனமும் செயல்பட்டன.
ஒவ்வொரு காற்றாலை இறகும் சுமார் 59.18 மீட்டர் நீளம் கொண்டிருந்ததால் தனித்துவமான கையாளுமுறையும் சிறப்பான சரக்கு சேகரிக்கும் இட வசதியை வ.உ.சி.துறைமுகம் கொண்டுள்ளது. மேலும, இத்தகைய மிகப் பெரிய சரக்குகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்திற்குள் சுமார் 1,00,000 சதுர மீட்டர் நிலப்பரப்பினை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. நெரிசல் இல்லாத சாலை போக்குவரத்து மற்றும் திறமையாள பணியாளர்கள் போன்றவையும் துறைமுகத்தின் இந்த வரலாற்றுமிக்க சாதனைக்குக் காரணங்களாக அமைந்தன.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர், ராஜேஷ் சௌந்தரராஜன், துறைமுகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து இச்சாதனையைக் கொண்டாடிய நிகழ்வில், துறைமுகத்தின் அனைத்து பங்குதாரர்களையும் அவர்களது சிறப்பான பங்களிப்பிற்காக வாழ்த்தினார். மேலும் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தனது செய்திகுறிப்பில், ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்த இந்த புதிய சாதனை துறைமுகத்தின் செயல்திறனையும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை ஆதரிக்கும் வ.உ.சி. துறைமுகத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










