» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் இயற்பியல் கண்காட்சி
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:27:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இயற்பியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணசீலராஜ் முன்னிலை வகித்தார். இயற்பியல் மன்ற பொறுப்பாளரும் இயற்பியல் ஆசிரியருமான ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார். 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது இயற்பியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தினர். 200க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. 300 கருத்து வரைபடங்கள் கண்காட்சியில் காண்பிக்கப்பட்டன.
மிகவும் சிறப்பு வாய்ந்த இயற்பியல் படைப்புகளான நிலநடுக்கத்தை உணர்ந்து கொள்ளும் கருவி, லேசர் ஒலிக்கற்றைக் கருவி, குறைந்த ஆற்றலில் செயல்படும் ரோபோ, தானியங்கி மின் தூக்கி, மின்னாற்றல் இயந்திரங்கள், நீர் ஆற்றல் இயந்திரங்கள், 360 டிகிரியில் சுழலும் காற்று இயந்திரங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள், தாங்கள் காட்சிப்படுத்திய இயற்பியல் படைப்புகளின் செயல்பாடுகளை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினர். கண்காட்சியானது மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
நாசரேத் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் கண்காட்சியை பார்வையிட இருக்கின்றனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் மற்றும் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:35:30 PM (IST)

ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, டிசம்பர் 2025 7:56:03 PM (IST)

கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ரணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி துவக்கம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:36:34 PM (IST)

பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)










