» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரிசி வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீவிபத்து

சனி 5, ஜூலை 2025 3:35:21 PM (IST)

தூத்துக்குடியில் அரிசி வியாபாரி வீட்டில் ஏசி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. 

தூத்துக்குடி எம்.கே. தெருவைச் சேர்ந்தவர் பாரூக். அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் இன்று மாடி அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த அறையில் இருந்த பாருக் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைகள் ஆகியோர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே கீழ் பகுதிக்கு வந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் தீ மளமளவென பரவி அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது அந்த அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory