» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஜயின் அறிவிப்பால் சிலர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்: கனிமொழி எம்பி பேட்டி
சனி 5, ஜூலை 2025 11:02:15 AM (IST)

"விஜயின் அறிவிப்பால் சிலர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்; த.வெ.க. தனித்து போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்காது" என்று கனிமொழி எம்பி கூறினார்.
பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில், நெல்லையில் நடைபெற்ற பாக நிலைமுகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு, தேர்தலுக்கானப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், த.வெ.க. தனித்து போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்காது. த.வெ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி. அவங்க இரண்டு பேருக்கு இடையே வேண்டுமானால் சவாலாக இருக்கும்.நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு. All the best. வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது மிகத் தெளிவாக தெரிகிறது.
முதலிலே இருந்தே தமிழ்நாடு ஓரணியில்தான் இருக்கிறது. வேறு யாரை இணைப்பது என்பது முதலமைச்சரின் முடிவு. எங்களோடு, நம்முடைய முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு வரக்கூடிய யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம். மக்களின் எதிரிகள் யார் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
அரசியல் வாதிJul 5, 2025 - 06:48:02 PM | Posted IP 172.7*****
உங்க கட்சி அதிர்ச்சி ஆகாமல் இருந்தால் சரி.
அதுJul 5, 2025 - 12:28:52 PM | Posted IP 172.7*****
திமுகவினர் அதிர்ச்சி .
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 6:24:23 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஞாயிறு 13, ஜூலை 2025 11:26:34 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மேலும் 3பேர் படுகாயம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 11:19:24 AM (IST)

உயிர் மூச்சு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா : படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஞாயிறு 13, ஜூலை 2025 10:53:10 AM (IST)

திருமண்டல தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு!
ஞாயிறு 13, ஜூலை 2025 10:30:58 AM (IST)

இசை பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் : மேயர் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 13, ஜூலை 2025 8:43:00 AM (IST)

தெளிவாக தெரிகிறது.Jul 6, 2025 - 09:57:17 AM | Posted IP 162.1*****