» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது; மேலும் 4 பேருக்கு வலைவீச்சு!
வெள்ளி 4, ஜூலை 2025 8:24:00 AM (IST)
தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து மில்லர்புரம், 3-வது மைல் வழியாக மடத்தூருக்கு மினிபஸ் இயக்கப்படுகிறது. கடந்த மாதம் 5-ந் தேதி இந்த பஸ்சை மடத்தூரை சேர்ந்த டிரைவர் அரவிந்த் (35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, அந்த பஸ்சின் படிக்கட்டில் மடத்தூரை சேர்ந்த ஜீவானந்தம் (19) உள்பட 2 பேர் பயணம் செய்தார்களாம். அவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தார்களாம்.
இதனை பஸ் டிரைவர் அரவிந்த் கண்டித்து உள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து படிக்கட்டில் நின்று தொந்தரவு செய்ததால் 2 பேரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டாராம். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரவிந்த் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு வந்த ஜீவானந்தம் மற்றும் சிலர் அரவிந்த் வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சைரஸ் விசாரணை நடத்தி ஜீவானந்தத்தை கைது செய்தார். இவ்வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 6:24:23 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஞாயிறு 13, ஜூலை 2025 11:26:34 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மேலும் 3பேர் படுகாயம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 11:19:24 AM (IST)

உயிர் மூச்சு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா : படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஞாயிறு 13, ஜூலை 2025 10:53:10 AM (IST)

திருமண்டல தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு!
ஞாயிறு 13, ஜூலை 2025 10:30:58 AM (IST)

இசை பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் : மேயர் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 13, ஜூலை 2025 8:43:00 AM (IST)
