» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பேரவைத் தேர்தல்
புதன் 2, ஜூலை 2025 4:09:23 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவியர் பேரவைத் தேர்தல் தேர்தலை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, சுயநிதிப் பிரிவு இயக்குனர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். மாணவியர் 1764 பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலம் பதிவு செய்தனர். வாக்குகள் உடனடியாக கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது.
மாணவர் பேரவை தலைவியாக பொருளியல் 3ஆம் ஆண்டு அன்டோனலா இஜினியா தேர்வு செய்யப்படடார். சுயநிதிப் பிரிவில் வணிகவியல் 3ஆம் ஆண்டு விஷ்ருதி பிரியதர்ஷினி தேர்வு செய்யப்படடார். மேலும், எழில் மகிபா – வணிகவியல் 3ஆம் ஆண்டு, சிபோரா – வணிக மேலாண்மை ஆகியோர் செயலராகவும், அமிர்த ஷர்மினி – ஆங்கில இலக்கியம் 3ஆம் ஆண்டு, அசினா பானு – நுண்ணுயிரியல் 3ஆம் ஆண்டு ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:41:54 PM (IST)








உங்களில் ஒருவன்Jul 4, 2025 - 03:09:49 PM | Posted IP 104.2*****