» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த பெண்!
திங்கள் 23, ஜூன் 2025 11:21:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவரை சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய சாட்சியாக செல்வி இருப்பதால் அவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செல்விக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கு வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுவதால் தனக்கு ஏதாவது அரசு வேலை வேண்டும் என்று கூறி செல்வி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் வேலைவாய்ப்பு கேட்டு செல்வி கோரிக்கை மனு அளித்து சென்று உள்ளார். மூன்றாம் வகுப்பு வரை தாம் படித்துள்ளதாகவும் தன்னுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று செல்வி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் பலி!
வியாழன் 10, ஜூலை 2025 10:40:09 AM (IST)

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)
