» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)
தூத்துக்குடியில் போலி ஆவணம் தயாரித்து ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் புழுதிவாக்கம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அந்தோணி நிகோலஸ் மகன் தாமஸ் கிங்ஸ்டன் (45) இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில், "நான் மேலே கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் தருவைக்குளம் ஆகும்.
நான் சென்னையில் ஐடி கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன். நான் கடந்த 02.11.2023 தேதியன்று தூத்துக்குடி தாலுகா, முள்ளக்காடு பகுதி – 1, கிராமம் சர்வே எண் : 265/2ஏ-ல் கீழ்புரம் 30 செண்ட் இடத்தை தூத்துக்குடி – 5, முள்ளக்காடு கிராமம், முத்தையாபுரம் தெற்கு தெரு, தங்கம் மனைவி அஜார் பேகத்திடமிருந்து பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவணத்தின் மூலம் கிரையம் பெற்றேன்.
கடந்த 14 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, உமரிக்காட்டை சார்ந்த சத்தியசீலன் என்பவரிடமிருந்து ரூ.10,00,000/- கடன் பெற்றுள்ளேன். அந்த கடன் வகைக்கு தருவைக்குளத்தில் உள்ள என்னுடைய இடத்தின் அசல் கிரைய ஆவணத்தை என்னிடம் அவர் பெற்றிருந்தார். அதற்கு பவரும் பெற்றிருந்தார். மேற்படி கடன் தொகையை வேறு நபரிடமிருந்து பெற்றுத் தந்ததாகவும் அவருக்கு ரூ.10,00,000 கொடுக்க வேண்டியது என்றும், மேற்படி சத்தியசீலன் என்னிடம் கூறினார்.
மேலும் ஸ்பிக்கில் உள்ள என்னுடைய 30 செண்ட் இடத்தை என்னுடைய அனுமதி பெற்று முழுமையாக நல்ல விலைக்கு விற்று தருவதாகவும், அதற்கு தனக்கு பவர் கொடுத்தால் மட்டுமே, அதனை விரைவாக முடிக்க முடியும் என்று கூறினார். மேலும் ரூ.10,00,000 தருவதாகவும், மேற்படி 30 சென்ட் இடத்தை பவர் எழுதிக்கொடுக்கக்கூடிய சமயத்தில் மீண்டும் ரூ.10,00,000 தருவதாகவும், ஏற்கனவே 3வது நபரிடம் கடன் வாங்கி கொடுத்த தொகையை சத்தியசீலன் கொடுத்து அதனுடைய அசல் ஆவணத்தை திரும்ப பெற்றுத்தருவதாக கூறினார்.
நானும் சம்மதித்து 22.03.2024 தேதியில் என்னை பவர் பத்திரம் எழுதிக்கொடுக்க சத்தியசீலன் வரச்சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் பத்திர அலுவலகத்தில் வைத்து சத்தியசீலன் பெயருக்கு 15 செண்ட் இடமும், அவருடன் இருக்கும் மாதவன் பெயருக்கு 15 செண்ட் இடமும் பவர் பத்திரம் எழுதி பதிவு செய்யப்பட்டது.
நான் மேற்படி சத்தியசீலனிடம் உங்கள் பெயருக்கு தான் பவர் என்று கூறினீர்கள். எதற்கு 2 பவர் பத்திரம் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு அப்போது தான் மதிப்புக்கூடும் மற்றும் நிலத்திற்கான பாதை 15 அடியாக இருபக்கமும் கிடைக்கும் என்று கூறினார். என்னுடைய தருவைக்குளத்தின் அசல் ஆவணத்தை திரும்ப கேட்டபோது தேடி எடுத்து எனது என்னுடைய தூத்துக்குடியில் இருக்கும் உறவினர் வசம் கொடுத்து விடுவதாக கூறினார்.
நான் பலதடவை அசல் ஆவணத்தை கேட்ட போது தேடி எடுத்து தருவதாக காலம் கடத்தி வந்தார். மேலும் நான் சத்தியசீலனிடம் வாங்கிய தொகையை திருப்பி செலுத்தும் வகைக்கு நான் பலமுறை சத்தியசீலனிடம் தொடர்பு கொண்டு எவ்வளவு வட்டி என்று நான் கேட்டதற்கு கணக்கிட்டு கூறுவதாக பலமுறை காலம் கடத்தி வந்தார் மற்றும் அந்த 15 செண்ட் ஒ 2 பத்திரத்தின் அசல் மற்றும் நகல் ஆவணங்களை 14 மாதங்களாகியும் எனக்கு தராமல் இன்று வரை காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நான் மீண்டும் சத்தியசீலன் அவர்களை பலமுறை முயற்சி செய்து தூத்துக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் 07.05.2025 அன்று இரவு 8.00 மணியளவில் நேரில் சந்தித்த போது என்னுடைய கணக்கு வழக்குகளையும், என் பத்திரத்தின் நகல்களையாவது தந்தால் எனக்கு தெரிந்த நபர்களிடம் நானே விற்பனை செய்து கொள்கிறேன் கூறினேன்.
நான் மேற்படி சத்தியசீலனுக்கு என்னுடைய 1.5 கோடி சந்தை மதிப்புள்ள 30 செண்ட் இடத்திற்கு பவர் கொடுத்தன் மிக முக்கிய காரணமே அதை அவர் விற்று தருவார் என்பதற்காகவே ரூ.10,00,000 தொகையினை பெற்றுக்கொண்டு அவர் சொல்லிய இரு நபர்களுக்கும் பவர் எழுதிக் கொடுத்தேன். ஆனால் அவர் அதனை செய்யாத காரணத்தினால் நானே இங்கு தங்கியிருந்து விற்பனை செய்து கொள்கிறேன் என்று நேரில் அவரிடம் கூறினேன்.
அதற்கு மேற்படி சத்தியசீலன் விற்பனை செய்ய இருக்கும் பார்ட்டியை கொண்டு வாருங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினார். அவர் என்ன செய்தார் என்றும், என்ன செய்ய போகிறார் என்றும் ஒரு விபரமும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டார். இந்த சூழ்நிலையில் கடந்த 12.05.2025 அன்று மாலை சுமார் 4.08 மணியளவில் என்னுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அந்த குறுஞ்செய்தியில் அன்புடையீர், தங்களின் சொத்தைப் பொறுத்த ஆவணம் பதிவுக்காக 1 எண் இணை சார்பதிவாளர் தூத்துக்குடி சார்பதிவகத்தில் 12.05.2025 அன்று பி.ப.04 : 04 மணிக்கு 21914866/2025 என்ற தற்காலிக எண்ணுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பரிவர்த்தனை தங்களுக்கு தெரியாமல் நடப்பதாக கருதினால் உடன் சார் பதிவாளர், 1 எண் இணை சார்பதிவாளர் தூத்துக்குடி (0461-2339006)-ஐ தொடர்புகொள்ளவும் என்று வந்தது.
உடனே அன்று மாலை 5.22 மணிக்கு மேற்படி நம்பரான 0461-2339006 தொடர்பு கொண்ட போது அந்த போனை எடுத்து பேசவில்லை. நான் பலமுறை முயற்சி செய்தும் அந்த நம்பரில் பேச முடியவில்லை. பின்பு தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டபோது பணி நேரம் முடிந்துவிட்டது. மறுநாள் வருமாறு அறிவுறுத்தினார்கள்.
மறுநாள் அதிகாலையில் மேற்படி சொத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்ததில் 12.05.2025 அன்று மேற்படி சொத்தை பவர் ஏஜென்டுகளான சத்தியசீலன், மாதவன் ஆகியவர்கள் சசிகலா புஸ்பா என்பவருக்கு கிரையம் பத்திரம் எழுதிக்கொடுத்ததாக தெரியவந்தது. உடனே 13.05.2025 அன்று அதே பத்திர பதிவு அலுவலகத்தில் தடங்கல் மனு கொடுக்கப்பட்டு ரசீது எண்.3032/2025 பெற்றுக் கொண்டேன்.
மேற்படி சத்தியசீலனிடம் நானே என்னுடைய இடத்தை விற்று கொள்வதாகவும், அதன் மூலம் வரும் தொகையிலிருந்து அவரிடமிருந்து வாங்கிய ரூ.10,00,000/- திரும்ப செலுத்தவும் பலமுறை சத்தியசீலனிடம் கேட்ட போது அவர் வட்டி கணக்கிட்டு கூறுவதாக சொல்லிவிட்டு, எனக்கு தெரியாமல் நான் அவர்களுக்கு எந்த மருத்துவரிடம் சென்று Life Certificate எதுவும் வாங்கிக்கொடுக்காத நிலையில் நான் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தயுள்ள நிலையில் என்னை ஏமாற்றி மோசடி செய்து எனது சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சத்தியசீலன், மாதவன், சசிகலா புஸ்பா கூட்டுச்சதி செய்து மோசடியாக 12.05.2025 தேதியில் பத்திரம் பதிவு செய்துள்ளார்கள்.
அவர்களுடைய செயல் சட்டவிரோதமானதாகும். நான் பலமுறை சத்தியசீலனிற்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுத்து இதுவரை பேசவில்லை. ஆகவே என்னை ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டுச்சேர்ந்து மோசடியாக பத்திர பதிவு செய்துள்ளதாலும், நான் மருத்துவரிடம் சென்று நான் எந்தவித Life Certificate வாங்கி கொடுக்காத நிலையில் மோசடியாக Life Certificate –யை உற்பத்தி செய்து சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட சத்தியசீலன், மாதவன், சசிகலா புஸ்பா ஆகியோர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க 14.05.2025 தேதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தற்போது கொடுக்கிறேன்.
பத்திர துறையிலிருந்து வந்த குறுஞ்செய்தியினால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே என்னை ஏமாற்றி என்னுடைய ரூ.1½ கோடி இடத்தை விற்று மோசடி செய்துள்ள விற்றவர் சத்தியசீலன் மற்றும் வாங்கியவர் சசிகலா புஷ்பா ஆகிய இருவர் மீதும் சட்டப்படி முழு நடவடிக்கை எடுக்கவும், எனது 1½ கோடி மதிப்புள்ள இடத்தினை விற்ற பணத்தினை முறையாக கணக்கு முடிக்கவும் ஆவணம் செய்ய வேண்டுமென்றும்,
மேலும் என்னை ஏமாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் கூட்டுச்சேர்ந்து மோசடியாக எனக்கு தெரியாமல் என் இடத்தை பத்திர பதிவு செய்துள்ளதாலும், நான் மருத்துவரிடம் சென்று நான் எந்தவித Life Certificate வாங்கி கொடுக்காத நிலையில் மோசடியாக Life Certificate –யை உற்பத்தி செய்து சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டதாலும் சத்தியசீலன், மாதவன், சசிகலா புஸ்பா ஆகியோர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், எனக்கும், எனது குடும்பத்தாருக்கும், எனது நிறுவனத்திற்கும் இன்றும் எப்பொழுதும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இவர்களால் இடறல் வராமல் பாதுகாப்பு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
naan thaanJun 21, 2025 - 10:57:43 AM | Posted IP 172.7*****
எந்த சசிகலா புஷ்பா , நம்ம திருச்சி சிவா அய்யா கூட சரக்கு அசிச்சுட்டு மடியில உக்காந்து இருக்குமே அந்த சசிகலா புஷ்பா வா .....
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 6:24:23 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
ஞாயிறு 13, ஜூலை 2025 11:26:34 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மேலும் 3பேர் படுகாயம்!
ஞாயிறு 13, ஜூலை 2025 11:19:24 AM (IST)

உயிர் மூச்சு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா : படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஞாயிறு 13, ஜூலை 2025 10:53:10 AM (IST)

திருமண்டல தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு!
ஞாயிறு 13, ஜூலை 2025 10:30:58 AM (IST)

இசை பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் : மேயர் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 13, ஜூலை 2025 8:43:00 AM (IST)

மக்கள்Jun 22, 2025 - 08:33:42 AM | Posted IP 172.7*****