» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் உலக ஒய்.எம்.சி.ஏ. தினவிழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
செவ்வாய் 10, ஜூன் 2025 3:19:53 PM (IST)

நாசரேத்தில் உலக ஒய்.எம்.சி.ஏ. தின விழாவையொட்டி 5 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் கடந்த 1844 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி, சர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் இளம் ஆண்கள் கிறிஸ்தவ சங்கம் ஒய்.எம்.சி.ஏ. என்ற அமைப்பை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் உலகம் முழுவதும் ஒய்.எம்.சி.ஏ. தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கூட்ட அரங்கில் வைத்து 181 வது ஒய்.எம்.சி.ஏ. தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆரம்பமாக மூக்குப்பீறி சி.எஸ்.ஐ. தூய மாற்கு ஆலய சேகரத் தலைவர் குருவானவர் ஞானசிங் எட்வின ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஆம்ஸ்ட்ராங் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக நாசரேத் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் குரு. மத்தேயு ஜெபசிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஒய்.எம்.சி.ஏ. தென் மண்டல மேம்பாட்டுச் செயலர் ஜான் போஸ், நெல்லை மண்டல செயலர் பொன்ராஜ், நிர்வாக குழு உறுப்பினர் இரஞ்சன், ஒருங்கிணைப்பாளர் லேவி அசோக் சுந்தரராஜ் ஆகியோர் ஒய்.எம்சி.ஏ. தோன்றிய வரலாற்று சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாசரேத்தில் உள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லம், திருமறையூர் முதியோர் இல்லம், காது கேளாதோர் இல்லம், தைலாபுரம் கல்வாரி சேப்பல் மாணவர் இல்லம்ஆகிய ஐந்து அமைப்புகளுக்கு நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஒருங்கிணைப்பாளர் எபநேசர் நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் ஆசிரியர்கள் ஸ்டெப்பின்ஸ், லவ்சன், விவின் ஜெபக்குமார் உட்பட ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
