» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்று தூத்துக்குடி மாணவி சாதனை : அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

செவ்வாய் 10, ஜூன் 2025 3:13:44 PM (IST)

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவி அன்விதா அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். 

இந்தோனேசியாவில் மே 24ல் நடைபெற்ற சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சேலஞ்ச் - 2025 போட்டியில், 6 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 500 மீட்டர் போட்டியில் ஐபிஎன் அகடமி சார்பாக கலந்து கொண்ட தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியின் எல்கேஜி மாணவி அன்விதா சிவக்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

அவரது சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் மாதார் மற்றும் ஜீவா ஆகியோரின் முயற்சிக்கும், மாணவியின் வெற்றிக்கு ஆதரவாக இருந்த ஹோலி கிராஸ் பள்ளிக்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்கள், பாராட்டுகளை தொிவித்திருந்தனா்.

இந்நிலையில் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வைத்து மாணவி அன்விதா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நோில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது அமைச்சர் விளையாட்டு துறையில் பல சாதனைகளை புாிய வேண்டும் அதற்கு தேவையான உதவிகளை எதுவாக இருந்தாலும் செய்து கொடுப்பதாக கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!

திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory