» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி நிறைவு: ரூ. 6 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
செவ்வாய் 10, ஜூன் 2025 10:07:17 AM (IST)

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மே 21 முதல் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு பெற்றது. இதில், ரூ.6 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆனது.
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மே 21 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடந்த புத்தக கண்காட்சியில் ரூபாய் 6 லட்சத்திற்க்கான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கோவில்பட்டியில் நடந்த நிறைவு விழாவில் குலுக்கல் முறையில் தேர்வான வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி ராமலட்சுமிக்கும்,ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி அனன்யாவுக்கும் தலா ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
புத்தக கண்காட்சி நிறைவு விழாவிற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.புத்தக கண்காட்சிக்கு உதவிய அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 2025 - 26ம் ஆண்டிற்கான தலைவர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குலுக்கல் முறையில் தேர்வான மாணவிகளுக்கு தலா ரூ1000 மதிப்புள்ள புத்தகங்களையும், நிறைவு விழாவிற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் புத்தகங்களையும் பரிசாக வழங்கி பேசினார்.
இதில் கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், காந்தி மண்டப பொறுப்பாளர் திருப்பதிராஜா, ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமமூர்த்தி, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் முருகேசன், புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ஆவுடையப்பன், காளிராஜ், ராஜபாண்டி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
