» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., த.வெ.கவில் ஐக்கியம் : வாழ்த்துக்கூறி வரவேற்ற விஜய்!!
திங்கள் 9, ஜூன் 2025 4:49:57 PM (IST)
திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இதன்படி தி.மு.க.,வைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், அ.தி.மு.க., வைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர்.ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ், அதிகாரி அருண்ராஜ் இன்று த.வெ.கவில் இணைந்தார். அவர் த.வெ.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியினர் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)











கீதா ஜீவன்Jun 10, 2025 - 04:15:19 PM | Posted IP 172.7*****