» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை விதிகளைமீறி ஏற்றி சென்ற 32 வாகனங்கள் பறிமுதல்
புதன் 4, ஜூன் 2025 8:41:55 AM (IST)
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி அதிகளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 32 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் போன்ற தனியார் வாகனங்களில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட விதிமுறை மீறல்கள் உள்ளனவா என்று போக்குவரத்து துறை அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று 2-வது நாளாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். ஆட்டோ, வேன்களில் அளவுக்கு அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனரா, முறையான உரிமம் வைத்துள்ளனரா, அனைத்து ஆவணங்களும் உள்ளனவா என்று சோதனை நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில், அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்கள், 2 வேன்கள், ஒரு ஆம்னி வேன் உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 32 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் விதிமீறல் தொடர்பாக 208 வழக்குகளை பதிவு செய்து, ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதே போன்று 2-வது நாளாக நேற்று 111 வழக்குகள் பதிவு செய்து, ரூ.91 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். இந்த சோதனை ஜூன் மாதம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 4:24:22 PM (IST)

புதிய வருவாய் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை : தமாகா இளைஞர் அணி கோரிக்கை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:23:08 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே பரிந்துரை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:06:18 PM (IST)

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 3:51:44 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)











அருள்ராஜ்Jun 8, 2025 - 11:52:47 AM | Posted IP 162.1*****