» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

தென் மாவட்ட ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க சக்திவாய்ந்த என்ஜின்: தெற்கு ரெயில்வே முடிவு!

புதன் 10, மார்ச் 2010 1:00:42 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க அதிக சக்திவாய்ந்த புதிய என்ஜின்களை பொறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
 
தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், பகுதிகளுக்கு செல்கிற ரெயில்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து ரெயில்களும் அதிவேக ரெயில் களாகும். ஆனால் அவற்றின் வேகம் மிக குறைவான அளவிலேயே உள்ளது. சராசரி வேகம் 55 கிலோ மீட்டர் அளவில்தான் இருக்கிறது. இதனால் மதுரைக்கு செல்ல 9 மணி நேரமும், திருநெல்வேலிக்கு செல்ல 12 மணி அல்லது 13 மணி நேரமும் ஆகிறது.

இதற்கு காரணம் இந்த ரெயில் என்ஜின்களில் பெட்டிகள் அதிகளவில் இணைக்கப்படுவதுதான். தென் மாவட்டங்களுக்கு செல்லும் எல்லா ரெயில்களிலும் 22, 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நெல்லை எக்ஸ்பிரசில் மட்டுமே அதிக சக்தி வாய்ந்த என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது.

முத்துநகர், கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை ஆகிய ரெயில்களில் 2,800 குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் பொறுத்தப்பட்டுள்ளதால் வேகமாக செல்ல முடியவில்லை. அதனால் இந்த ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

4000 குதிரை சக்தி கொண்ட அதிநவீன டபுள்யூ. டி.பி.4 என்ற 20 என்ஜின்கள் விரைவில் வர இருக்கின்றன. அவற்றை தென் மாவட்ட ரெயில்களில் இணைத்து விட்டால் வேகம் அதிகரிக்கும். பயண நேரம் குறையும் என்று தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் கார்லேஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சென்னை-மதுரை வரையில் 2-வது அகலப்பாதை அமைக்கும் பணி இன்னும் ஒரு வருடத்தில் முடிந்து விடும். மதுரை-திண்டுக்கல் இடையே 2வது பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. எஞ்சிய பணிகள் முடிந்து விட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் வேகம் அதிகரிக்கும்.

திருச்சி பொன்மலையில் அதிவேக என்ஜின்களை பராமரிக்கும் பணிமனை ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு கார்லேஸ் கூறினார்.


மேலும் தொடரும் செய்திகள்

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!

ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

Sponsored Ads