» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காணாமல் போன தெருவை கண்டுபிடிக்க வேண்டும் : ஆட்சியரிடம் ஜிபி முத்து கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 5:11:37 PM (IST)

உடன்குடியில் காணாம் போன தெருவை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டம்,காலன் குடியிருப்பு வருவாய் கிராமம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233 ல் கீழ தெரு என்று ஒரூ தெரு இருந்தது, நத்தம் சர்வே எண் 233/21 இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று மேற்படி கீழ தெரு என்று ஒரூ தெரு இருந்தது தெரியாமல் அந்த தெரு காணாமல் போய் விட்டது. அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது. எனவே தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
