» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. மே மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.05.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பத்தாம்வகுப்பு, பிளஸ் 2. பட்டப்படிப்பு, BE, DIPLOMA, I.T.I டிரைவர் மற்றும் கணினிபயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதியுள்ள தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Jobseekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவுசெய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
R. Maripriyaமே 16, 2025 - 10:28:22 AM | Posted IP 104.2*****
Am need a job
S Gurulakshmirevathiமே 13, 2025 - 01:50:29 PM | Posted IP 162.1*****
I am need a job
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)











M.Sri Devi Bharathiமே 16, 2025 - 10:29:48 AM | Posted IP 104.2*****