» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம்!
வெள்ளி 9, மே 2025 10:04:45 PM (IST)

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலகலமாக நடந்தது.
விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 10-ம் நாளான இன்று மாலையில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
காலை 10.30 மணிக்கு கீழவாசலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து ரதாரோகணம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் அலங்கார கோலத்தில் தேரில் எழுந்தருளினர். மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. திருத்தேர் சுவாமிகளுடன் நிலையிலிருந்து புறப்பட்டு கீழரத வீதி, காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு வழியாக மீண்டும் கோவிலின் தேர் நிலையை வந்தடைந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகம் பொங்க வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். மேலும், இத்திருத்தேர் பவனியின் போது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பூ, பழம், தேங்காய், மாலை உள்ளிட்டவற்றை கொண்டு சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)








