» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 9, மே 2025 10:42:19 AM (IST)

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி சிவன் கோவில் அருகே தெப்பக்குளத்தில் சுமார் 10 அடி உயரம் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் ஒரு பெண் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.  பின்னர் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார் என்று தெரியவில்லை அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். சிவப்பு சிற பூப்போட்ட சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் கவரிங் நகைகள் அணிந்து உள்ளார். தெப்பக்குளத்தில் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!

திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory