» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் செல்வதில் விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 8, மே 2025 3:18:37 PM (IST)
சாத்தான்குளம், உடன்குடி போன்ற தொலைதூர சிறு நகரங்களுக்கு சென்று வரும் பேருந்துகளுக்கு ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் வழியாக சாத்தான்குளம் மற்றும் மெய்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஸ்ரீவைகுண்டம் உள்ளே செல்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த பாஸ்கள் அனைத்தும் அதிகமான கிராமங்களை இணைக்கும் இந்த பேருந்துகள் ஒவ்வொரு முறையும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் சென்று வருவதால், திருநெல்வேலி மற்றும் சாத்தான்குளம், நாசரேத்.உடன்குடி நகரங்களில் இருந்து ஒவ்வொரு சவாரியையும் அவர்களால் சரியான நேரத்தில் எடுக்க முடியவில்லை என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் சென்று வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே வேளையில் சாத்தான்குளம், உடன்குடி போன்ற தொலைதூர சிறு நகரங்களுக்கு சென்று வரும் பேருந்துகளுக்கு திருவைகுண்டம் ஊருக்குள் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டியது கட்டாயம். ஏனென்றால் பஸ்கள் அனைத்தும் சரியான நேரத்திற்கு அதேபோல் நாசரேத்துக்கு திருநெல்வேலியில் இருந்து இரவு 8மணிக்கு பிறகு வண்டியே கிடையாது..8.30 கங்கு உண்டு ஆனால் இவங்க வேண்டுமென்றே ஓட்ட மாட்டாக்காங்க.
திருநெல்வேலியில் இருந்து வேலை முடிந்து நாசரேத் வழியாக உடன்குடி செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பலரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் இரவு 10.10 வரைக்கும் காய்ச்சிருக்க வேண்டிய நிலைமை உள்ளது அதன்பின் இரவு 10 10 க்கு உடன்குடி பஸ் வருகிறது. அதில் தான் ஏறி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பயனடையும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்கள் கருத்து
Ganapathyமே 9, 2025 - 11:51:41 AM | Posted IP 104.2*****
அரசு பொது போக்குவரத்து செயல்படுவது மக்கள் நலனுக்கா இல்லை ஓட்டுனரின் சொளஙரியத்நிற்கா ?
அனந்தமே 9, 2025 - 11:25:15 AM | Posted IP 162.1*****
இதற்கு தீர்வு நாசரேத்து ஊரிலிருந்து பல மினி பேருந்துகள் கிராமத்து வழியாக உடன்குடி இயக்கினால் போதும்
சண்முக ராஜாமே 9, 2025 - 10:59:43 AM | Posted IP 104.2*****
மேலும் தவறான கருத்துக்களை பரப்பினால் புகார் அளிக்கபடும்
சண்முக ராஜாமே 9, 2025 - 10:58:27 AM | Posted IP 162.1*****
ஸ்ரீவைகுண்டம் வழியாக செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் மக்கள் அதிகமாக உபயோக படுத்துகிறார்கள்.சாத்தான்குளத்திலிருந்து நேரடியாக பேய்குளம் வழியில் பேருந்து சேவைகள் உள்ளன அதை மக்கள் பயன்படுத்தினால் நல்லாயிருக்கும். மேலும் ஸ்ரீவைகுண்டம் மக்கள் சாத்தான்குளம் நாசரேத் உடன்குடி செல்வதற்கு இந்தப் பேருந்துகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளை நிறுத்த சொல்லி கேட்கும் நடத்துனர்கள் மீதும் அளிக்க நேரிடும். உங்களின் வேலை வாங்கும் சம்ப ஓட்டுனர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வது அதிக பணிச்சுமை மற்றும் மனத்துஅழுத்தம் அதிகமா இருப்பின் உரிய விடுப்பு எடுத்து அதை சரிசெய்து கொள்ள வேண்டுகிறேன்.
அனந்தமே 9, 2025 - 10:55:48 AM | Posted IP 162.1*****
இதற்கு அவர்கள் ஆழ்வார்திருநகரி இருந்து மெஞ்சானபுரம் வரை பல மினி பேருந்துகள் இயக்கினால் போதும்
சங்கரலிங்கம்மே 9, 2025 - 09:17:43 AM | Posted IP 172.7*****
பொது பேரூந்துகள் அனைத்து பொது மக்களும் பயன்பெறும் வகையில் மட்டுமே அமைய வேண்டும்.
ஆதி ஸ்ரீவைகுண்டம்மே 9, 2025 - 09:12:03 AM | Posted IP 162.1*****
திருவைகுண்டத்தில் இரண்டு பாலங்கள் இருக்கிறது ஒரு பாலத்தின் வழியாக சென்று விட்டு மறு பாலத்தின் வழியாக வெளியே வருகிறது இதற்கு எதற்கு இந்த ஓட்டுனர்கள் கஷ்டப்பட வேண்டும் அதே சமயத்தில் நாசரேத்தில் ஊர் நுழைவாயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு ஒரு ஏழு எட்டு ஹேர்பின் பெண்டு இருக்கிறது அது உள்ள போகிறதுக்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது சிறுவைகுண்டத்தில் உள்ள வந்துட்டு போறதுக்கு அதிகபட்சம் அஞ்சு நிமிஷம் ஆகலாம். நாசரேத் உள்ளே சென்று வர 10நிமிடங்கள் ஆகலாம். இது போக்குவரத்து துறையின் திட்டமிட்ட சதி .ஆதி ஸ்ரீவைகுண்டம்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)









Ganapathyமே 9, 2025 - 11:52:40 AM | Posted IP 172.7*****