» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!

சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மனைவி காஞ்சனா (60), இவர் இன்று காலை 6 மணியளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் வயரை மிதித்துள்ளார். 

இதில மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory