» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)
தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சவேரியார் பிச்சை மகன் ஆனந்த் சைரஸ் (41), இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரோபியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்ப முதல் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், ஆனந்த் சைரஸ் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் அவர் குடியிருந்த வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் சொல்லவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ராஜகோபால் நகர் வது தெருவில் வாடகை வீட்டில் குடியேறினர். அங்கு கடந்த 19ஆம் தேதி இரவு குடிபோதையில் காம்பவுண்டில் பெண்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஆனந்த் சைரஸ் என் வீட்டுக்கு எப்படி வரலாம் என்று திட்டினாராம். அதற்கு போலீசார் நாளை காலையில் உனது மனைவியுடன் காவல் நிலையம் வர வேண்டும் என்று கூறவே இதனால் தன்னை போலீசார் அவதூறாக திட்டிவிட்டு, வீட்டுக்குள் சென்ற ஆனந்த் சைரஸ் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் உடல் முழுவதும் தீயில் கருகி தீக்காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் இன்று மாலை 6.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் : இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)











தமிழன்Apr 23, 2025 - 10:01:06 AM | Posted IP 172.7*****