» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

தூத்துக்குடியில் இடி மி்ன்னலுடன் கனமழை பெய்தது. மேலும், மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழந்தது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாநகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாலை 6 மணியளவில் மாநகா் பகுதி முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி, சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், தட்டாபாறை எஸ்எஸ் காலனியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்து என்பவரது பசு மாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. மேலும் மாநகரின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








