» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 22ஆம் தேதி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) "ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் வளர்ப்பிற்கேற்ற மீன் வகைகள், ஒருங்கிணைந்த மீன் பண்ணை அமைப்பதற்கான இடத்தேர்வு முறைகள், நீர்தரக் கட்டுப்பாடு, உணவு தயாரித்தல் மற்றும் உணவிடுதல் முறைகள், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு கற்பிக்கப்படவுள்ளன.
மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், வருமானத்தை அதிகரிக்க முனையும் விவசாயிகளுக்கும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்குப் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.300.
பயிற்சியில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள 8870389155, 8122382403, 9892045661 மற்றும் 9994450663 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும். ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பில் ஆர்வமுடையவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)

தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை அறிமுக விழா!
வியாழன் 13, நவம்பர் 2025 5:51:24 PM (IST)

நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)








