» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அஸ்ட்ரோ கிளப்  சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. கோவில்பட்டி கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார்.

கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதா, வணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் பிரியங்கா அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், 5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ் கலந்து கொண்டு சூரியன், நிலா ஆகியவற்றின் இயக்கங்களை வைத்து நாட்காட்டி கணிப்பது பற்றியும், சூரியன் நிழலை வைத்து கட்டிட உயரத்தை கணிப்பது குறித்தும், வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். 

இதில் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியை சரவண குமாரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory