» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவலரின் தாய் கொலை வழக்கில் இளம்பெண் கைது : நகை மீட்பு - பரபரப்பு தகவல் !

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:14:03 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்த வழக்கில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா (70).  மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஜெயபால் இறந்து விட்டதால் வசந்தா தனியாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று வசந்தா தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் திருடுபோயிருந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜான் ஆல்பட்ஜான்  சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக டிஐஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை  நடத்தியதில், பேய்குளம் அருகே உள்ள மீரான் குலத்தைச் சேர்ந்த செல்வ ரதி (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது.  கொலை செய்யப்பட்ட வசந்தா வீட்டில் எலுமிச்சம்பழம் மரம் வளர்த்து வந்துள்ளார். மேலும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளார்.

வசந்தாவின் வீட்டில் எலுமிச்சம்பழம் மற்றும் கோழிகளை செல்வரதி திருடி  சென்றுள்ளார். இதை தட்டி கேட்ட வசந்தாவிடம் தகராறு செய்து அவரை வீட்டுக்குள் கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு கொலையை மறைப்பதற்காக 6 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் நகைகளை மீட்டனர். மேலும். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education




Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory