» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 10:21:08 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., மார்க்கெட்டில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பழம் மகன் மணிராஜ் (52), இவர் அந்தோணியார் கோவில் அருகில் உள்ள வ.உ.சி., மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10:30 மணியளவில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை 7மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார்.
அப்போது கடையின் ரோலிங் ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.4ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. மேலும் பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் மணிராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் 4 வாசல்கள் உள்ளது. அனைத்து வாசல் கதவுகளும் பூட்டப்பட்டு இரவு காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான கேட் வழியாக மட்டும்தான் வியாபாரிகள் இரவு நேரங்களில் உள்ளே சென்று லாரியில் வரும் பொருட்களை இறக்கி வைக்க முடியும். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் மார்க்கெட் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
