» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளை: 4பேர் கைது

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:17:54 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது டேவிஸ் புரம் ரோட்டில் கையில் ஆயுதங்களுடன் 4பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போலீசார் 4 பேரையும்  சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் தாளமுத்து நகர் சுனாமி காலனி ராமதாஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஜெகன் (20), மகேந்திரன் மகன் சஞ்சய் (20), வண்ணாரப் பேட்டை முருகன் மகன் மாரி செல்வம் (19), மாப்பிள்ளையூரணி திருவள்ளுவர் நகர் செட்டி பெருமாள் மகன் சரவணகுமார் (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து

மக்கள்Apr 13, 2025 - 06:15:28 PM | Posted IP 104.2*****

கால்ல சுட்டு என்கவுண்டர் செய்து பிடிக்க வேண்டியது தானே, அப்போது தன திருந்துவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory