» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு : சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவு

சனி 12, ஏப்ரல் 2025 8:45:17 AM (IST)



தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தூத்துக்குடியில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர், தூத்துக்குடி 4-ம் கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது கார் மோதி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு சிறப்பு மக்கள் கோர்ட்டில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பிறகு, துரைசிங்குக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 6 ஆயிரத்து 486 நஷ்ட ஈடு தொகை வழங்க முதன்மை நீதிபதி வசந்தி உத்தரவிட்டார். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா மற்றும் வக்கீல்கள் ரெங்கநாதன், குருசாமி, பால்ஆசீர் ஆகியோர் ஆகினர்.


மக்கள் கருத்து

grrjaApr 12, 2025 - 10:56:34 AM | Posted IP 162.1*****

who will pay insurance company / Car owner

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory