» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

சுடுகாட்டில் வயதான தம்பதியர் தற்கொலை முயற்சி!

புதன் 10, மார்ச் 2010 10:19:11 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே மேலநாட்டார் குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(85). இவருடைய மனைவி செல்லத்தாய்(80). இவருக்கு குழந்தைகள் இல்லை. நாராயணனும், அவரது மனைவி செல்லத்தாயும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாராயணன், பாளை., ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று மாலையில் நாராயணனும், அவரது மனைவியும் ஊருக்கு வெளியே சுடுகாட்டு பகுதியில் விஷம் அருந்தி, தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் செல்லத்தாய் அதே இடத்தில் இறந்து விட்டார். ஆனால் நாராயணனுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

அவரை உடனே பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் தொடரும் செய்திகள்

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!

ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

Sponsored Ads