» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம்!

புதன் 10, மார்ச் 2010 10:18:48 AM (IST)

 
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம் மற்றும் மினி டிராக்டர்களை வழங்கும் விழா நடந்தது.

விவசாயிகளுக்கு மினி டிராக்டர் வழங்கி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் பேசியதாவது, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2009-2010ன் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 27 கருவிகள் மானியத்தில் வழங்க அரசு 14 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்தது. அதில் இதுவரை நடப்பாண்டில் பல்வகை பயிர் கதிர் அடிக்கும் கருவி 1, மக்காச்சோளம் கதிரடிக்கும் கருவிகள் 2, எட்டு குதிரை திறனுக்குள் உள்ள இயந்திர களைக்கருவிகள் 3, மினி டிராக்டர் 2, ரோடோவேட்டர் 3, இருபாலர் உபயோகிக்கும் விவசாய கருவிகள் ஆகியவை நடப்பாண்டில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4 லட்ச ரூபாய் மானியத்தில் ஒரு நெல் அறுவடை இயந்திரம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் மானியத்தில் இரண்டு மினி டிராக்டர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் பிரகாஷ் தெரிவித்தார்.

ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனசிங் டேவிட், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் கணேஷ்பாபு, வேளாண்மை அலுவலர் பாலசிங், இளநிலை பொறியாளர்கள் சிதம்பரம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் தொடரும் செய்திகள்

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!

ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

Sponsored Ads