» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பஸ் நிலையத்தில் புதிய சுகாதார வளாகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:06:00 PM (IST)

தூத்துக்குடியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சுகாதார வளாகம் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம், முத்து நகர் கடற்கரை, சிவன் கோயில் மற்றும் ரோச் பூங்கா கடற்கரை ஆகிய இடங்களில் மேலும் ஒரு புதிய சுகாதார வளாகம் வேண்டும் என்ற மாநகர மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அந்தப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும் வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் உடனடிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





