» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் புதிய சாதனை

வியாழன் 13, மார்ச் 2025 10:54:16 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை நடைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 12.03.2025 அன்று 2023-24 நிதியாண்டு கையாண்ட அளவான 7,47,363 TEUs சரக்குபெட்டகங்களை இந்த நிதியாண்டு 20 நாள்களுக்கு முன்னதாகவே கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் 2025 வரை 7,21,268 TEUs சரக்குபெட்டகங்களை கையாண்டு 7.52 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் தூத்துக்குடி சர்வதேச சரக்குபெட்டக முனையம் மற்றும் தக்ஷின் பாரத் கேட்வே சரக்குபெட்டக முனையமும் இணைந்து 1 மில்லியன் TEUs சரக்குபெட்டகளுக்கு மேல் கையாளும் திறனை பெற்றுள்ளது. 8,000 TEUs கொள்ளளவு கொண்ட பெரியவகை கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக இம்முனையங்களின் மிதவை ஆழம் 14.20 மீட்டராக உள்ளது. மேலும் உலகதரத்திற்கு இணையாக இம்முனனயங்கள் ஒரு மணி நேரத்திற்கு 30 மேற்பட்ட நகர்வுகளை நிகழ்த்தி வருகிறது.

சமீப்பத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தால்; 5,00,000 TEUs சரக்குபெட்டகளுக்கு மேல் கையாண்ட துறைமுகங்களுக்குள் 3வது சிறந்த துறைமுகத்திற்கான விருதினை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பெற்றது. மேலும், இந்திய அரசின் தேசிய தளவாட தரவு சேவை நிறுவனம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் பல்வேறு செயல்திறன் குறீயிட்டுகளான குறைந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நேரம், சரக்குபெட்டக நிலையங்களின் குறைந்த நேர சேவை போன்ற குறியீடுகளில் முன்னோடியாக திகழ்கிறது என்றும் தக்ஷின் பாரத் கேட்வே சரக்குப்பெட்ட முனையம் தென்னிந்தியாவின் சிறந்த சரக்குபெட்டக முனையமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுருந்தனர். 

வ.உ.சிதம்பரனார் துறைமுகங்களின் சரக்குபெட்டக முனையங்கள் தூர கிழக்கு மற்றும் மைய கிழக்கிலுள்ள துறைமுகங்களுடன் நேரடி இணைப்பினை பெற்றுள்ளது. மேலும் அனைத்து இந்திய பெருந்துறைமுகளுடன் இணைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு தினமும் சரக்குபெட்டக போக்குவரத்து சேவையினை வழங்கி வருகிறது. சமீபத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் அதிகளவு சரக்கபெட்டகங்களை கையாளுவதற்கு சரக்குபெட்ட கப்பல்களுக்கு அதனை சார்ந்த கட்டணங்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், இச்சாதனை புரிவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்த துறைமுக சரக்குபெட்டக முனைய இயக்குபவர்கள், துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் கடற்சார் குழுமத்தை சார்ந்த அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார். 

மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுக சரக்குபெட்டக முனையங்களுக்கு 30 மேற்பட்ட பெரியவகை சரக்குபெட்டக கப்பல்களின் தற்காலிக வருகை புரிந்துள்ளது என்று கூறினார். இன்னும் சில மாதங்களுக்குள் துறைமுக சரக்குகப்பல்கள்; வரும் நுழைவுவாயிலை அகலப்படுத்தும் பணி மற்றும் ஆழப்படுத்தும் பணி முடிவடையும் சூழலில் அதிக சரக்குபோக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். 


மக்கள் கருத்து

சாமி அவர்களேMar 14, 2025 - 08:42:13 AM | Posted IP 162.1*****

அது சில பணத்தாசை பிடித்த மீனவர்கள் தான்

சாமிMar 14, 2025 - 01:15:25 AM | Posted IP 162.1*****

கஞ்சா தான் முதல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors


CSC Computer Education







Thoothukudi Business Directory