» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச திரைப்பட விழா: தூத்துக்குடி இயக்குனரின் குறும்படம் முதலிடம் பிடித்து சாதனை!

வியாழன் 13, மார்ச் 2025 10:07:34 AM (IST)



கொல்கத்தாவில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா தமிழில் தூத்துக்குடி இயக்குனரின் "திரு" குறும்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கொல்கத்தாவில் இண்டர்நேஷ்னல் ஸ்டார் பிலிம் பெஸ்டிவல் அவார்ட்ஸ் (ISFFA)  சார்பில் நடந்த 5ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குநர் அருந்ததி அரசு என்பவரின் "திரு" என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலகளவில் 63 நாடுகளைச் சேர்ந்த 70 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படங்கள் போட்டியில் கலந்து கொண்டன. அதில் ஒரு பகுதியாக தமிழ் மொழி சார்பில் கலந்து கொண்ட 200 குறும்படங்களில் "திரு" என்ற குறும்படம் மிகச்சிறந்த தமிழ் குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து அக்குறும்படத்தின் இயக்குநர் அருந்ததி கூறம்போது, "தூத்துக்குடி மாவட்ட காவல் துறையும் வானம் எண்டர்டெய்ன்மெண்ட்டும் இணைந்து தயாரித்த இப்படத்தில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் காவல் துறை அதிகாரியாகவே நடித்துள்ளார். திருநங்கையர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அழுத்தமாக பேசும் விதமாக இக்குறும்படத்தை இயக்கியுள்ளேன். 

இப்படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை, திருநங்கை சகோதரிகள், படத்தில் நடித்த பிற திரைக் கலைஞர்கள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், நிர்வாக மேற்பார்வையாளர், இணை தயாரிப்பாளர்கள் மற்றும் கொல்கத்தா சென்று போட்டியில் பங்கேற்க உதவி புரிந்தவர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் காவல் துறை அதிகாரியாகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடததக்கது. இந்த  படத்தின் வெளியிட்டு விழா தூத்துக்குடியில் நடந்த போது அப்போதைய மாவட்டஆட்சித்தலைவர் லெட்சுமிபதி,  எஸ்.பி. பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education

New Shape Tailors






Thoothukudi Business Directory