» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்!
வியாழன் 13, மார்ச் 2025 8:50:46 AM (IST)
தூத்துக்குடியில் 2 நாட்களுக்கு பின்னர் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மார்ச் 11 மற்றும 12 ஆகிய 2 நாட்கள் பலத்த மழை பெய்யும், கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ஆலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வானிலை சீரடைந்துள்ள நிலையில், தூத்துக்குடியில் இன்று சுழற்றி முறையில் 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
