» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்க வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை!

வியாழன் 13, மார்ச் 2025 8:36:32 AM (IST)



தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிட வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். 

"2025-2026 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, கல்வியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிடவும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி தலைமையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு  கொடுக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகர மையப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாத ஒரே காரணத்தினால் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் பன்மடங்கு கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். ஆகவே தூத்துக்குடி மாநகர் மையப் பகுதியில் கண்டிப்பாக அரசு கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின்  மத்திய குழு உறுப்பினர் சி.மிருதுளா, மாநில இணைச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

உண்மை விளம்பிMar 13, 2025 - 10:50:32 PM | Posted IP 162.1*****

தூ.டியில் சீனா வானா (சி.வ) அரசு மேனிலைப்பள்ளி இருக்கிறதே! அது அரசு பள்ளி தானே!

ABVPMar 13, 2025 - 11:32:22 AM | Posted IP 172.7*****

Pala varudangalaga ABVP intha korikkayai valiurithi varugirathu.... Arasu thoothukudiyil arasu kalai ariviyal kalloori thodanga pareselikkavendum.

ராமநாதபூபதிMar 13, 2025 - 10:07:06 AM | Posted IP 162.1*****

அருமையான நியாமான கோரிக்கை. அதே போல தூத்துக்குடியில் ஒரு அரசு மேல்நிலை பள்ளி இல்ல என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதையும் வலியுறுத்தவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory