» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி: மீன்வளக்கல்லூரி அழைப்பு

புதன் 12, மார்ச் 2025 4:41:20 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் "மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு முறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பதன தொழில்நுட்பத் துறை வாயிலாக இம்மாதம் (மார்ச்,2025) 26ஆம் தேதி புதன்கிழமை "மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு முறைகள்" எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் எளிதில் தயாரிக்கக்கூடிய மதிப்பூட்டிய மீன்பொருட்களான மீன் ஊறுகாய், மீன் தொக்கு, இறால் ஊறுகாய், மீன் கட்லெட், மீன் உருண்டை போன்ற மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும், சிறந்த தொழில் மேலாண்மை குறித்தும் செயல்முறை விளக்கங்களோடு கற்பிக்கப்பட உள்ளன. 

மீன்வளம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இதனை சுயதொழிலாக ஏற்று நடத்த முனைவோருக்கும், இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.500/-. பயிற்சியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்யவும். பயிற்சி குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 94426 40958 மற்றும் 63806 31162 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும். 

மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு முறைகள் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களும், மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதை ஒரு தொழிலாக மேற்கொள்ள முனைவோரும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தெரிவித்துக் கொள்கிறார்.


மக்கள் கருத்து

A. NanciliMar 12, 2025 - 07:01:37 PM | Posted IP 162.1*****

6/561/A st Mary's colony thoothukudi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory