» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர், சாத்தான்குளம்,ஏரல் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட விவசாயிகள், வேளாண்மை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கருமேணி ஆறு பாசனத்தில் சுப்பராயபுரம் அணைக்கட்டில் உயரமான ஷட்டர் அமைத்திருப்பதாக விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், குற்றச்சாட்டுகளை தெரிவித்தும் விவசாயிகள் பேசினர்.மேலும் வருகை பதிவேடு என கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்பு அதில் தீர்மானங்களை விவசாயிகளுக்கு தெரியாமல் நிறைவேற்றுவதாக புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் கிராம அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
