» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தொகுப்பூதியம் அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதலாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா)-Protection Officer(Non Institutional Care) பணியிடம் 1 தொகுப்பூதியம் ரூ.27,804/- என்ற அடிப்படையிலும், சிறப்புசிறார்காவல் அலகிற்கு 2 சமூகப்பணியாளர்கள் (Social Worker) பணியிடம் 1ற்கு ஒரு மாதத்திற்கு ரூ.18,536/- என்ற அடிப்படையிலும் தொகுப்பூதியம் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ”மிஷன் வத்சல்யா” (Mission Vatsalya) வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்கண்ட தகுதிகளை கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா) Protection Officer(Non Institutional Care) – காலிப்பணியிடம்-01
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி /சமூகவியல் /குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேம்பாடு ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மன நலம் / சட்டம் / பொது சுகாதாரம் ஆகியவற்றில் 2 வருட அனுபவம் கொண்ட அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (10+2+3 அமைப்பு) . கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 14.02.2025 அன்று 42 வயதிற்குமிகாமல் இருத்தல் வேண்டும்.
சமூகப்பணியாளர்கள் (Social Worker)-02
சமூகப்பணி(Social Work), சமூகவியல்(Sociology), சமூகஅறிவியல்(Social Science), ஏதேனும் ஒருபாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (10+2+3 அமைப்பு) மேலும், கணினி இயக்குவதில் திறன் இருத்தல் அவசியம். 14.02.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை தூத்துக்குடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் வாயிலாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி - 628 003. தொலைபேசி எண்: 0461-2331188 என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
