» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் (PHH, AAY) அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட தெரிவிக்கப்படுகிறது.
வெளியூரில் / வெளிமாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் நபர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவுசெய்யது கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

பொது நலக் கருதி உங்களில் ஒருவன்Feb 18, 2025 - 09:03:14 PM | Posted IP 162.1*****