» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 26ம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி திருவிழா வருகிற 26-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மாலை 5.00 மணிக்கு பாம்பே புகழ் கணேசன் மற்றும் குழுவினர் "மங்கள இசை", 5.30 மணிக்கு தேவார இசை மணி ச.சுப்பிரமணியன், தேவார ஆசிரியர் & மாணவர்கள் வழங்கும் "திருமுறை இன்னிசை", 6.00 மணி "216 சிவலிங்க பூஜை”, திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணி குழந்தைகளுக்கான "மாறுவேடப் போட்டி" நடக்கிறது

8.30 மணிக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான "தேவாரப் போட்டி” நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு "திருமந்திரநகர் தல வரலாறு புத்தகம் மறுவெளியீடு நடக்கிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் ஆர்.ஆர். அசோக்குமார் வாழ்த்துரை வழங்குகிறார்.. 

இரவு 10.00 மணிக்கு 50 மேற்ப்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்கும் "பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 12.00 மணிக்கு சித்தாந்த சுடர்மணி, சிவஞானசாகரம் வழங்கும் 'சிறப்பு சொற்பொழிவு", இரவு 01.00 மணிக்கு பாஸ்கர் மதிவதினி குழுவினரின் சிவநாம சங்கீர்த்தனம்" இரவு 02.00 மணிக்கு விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பேராசிரியர்.கோ.பழநி & குழுவினரின் "ஆன்மீக பட்டிமன்றம்" நடக்கிறது. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு விழாவில் நான்கு கால பூஜைகள் சாமி அம்பாளுக்கு சிறப்பாக நடைபெறும். ஓம் நமசிவாய எழுதுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் காகிதங்கள் வழங்கப்படும். காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு பால், சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை அறங்காலவர் குழு மற்றும் நவராத்திரி விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education






New Shape Tailors



Thoothukudi Business Directory