» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி முன்பு பெற்றோர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு!!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:04:40 PM (IST)

தூத்துக்குடியில் பேட்ரிக் ஆலயம் வளாகத்தில் உள்ள ஆரம்ப பள்ளியை இடித்து விட்டு புதிய கல்வி கட்டிடம் கட்டுவற்கு காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு கீழ் செயல்படும் தூய பேட்ரிக் ஆலயம் தூத்துக்குடி 1ம் ரயிவே கேட் அருகே உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான ஆரம்ப பள்ளி கோயில் வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலயத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆலய வளாகத்தில் உள்ள பள்ளியை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளியை தற்காலிகமாக ஆலயத்தில் வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் மிகவும் பாதிக்கப்பட்டது. இது குறித்து பலமுறை கோயில் நிர்வாகம் மற்றும் சேகர குருவிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் இன்று தூத்துக்குடி ஒன்னாம் ரயிவே கேட் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சேகர குருவிடம் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி கட்டிடம் நன்றாக இருக்கும் போது ஏன் இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட வேண்டும் என ஆவேசமாக பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் செயல்படும் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
