» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக வித்யா யாகம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பக்தி பேரவை சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி சிறப்பு வித்யாகம் நடைபெற்றது.
வீரவநல்லூர் குலசேகர ராமானுஜம் மடம் ராமானுஜ ஜியர் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆசி உரை வழங்கினார். இதில் ஏராளமான பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில் மாணவ மாணவிகள் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்ட பேனா மற்றும் நெல்லிக்கனி வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 10, நவம்பர் 2025 10:30:36 AM (IST)

நாசரேத் பேராலயத்தில் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. அணி அமோக வெற்றி!
திங்கள் 10, நவம்பர் 2025 10:19:00 AM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)








