» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)
கோவில்பட்டியில் டிரைவரைத் தாக்கி ஆட்டோவை கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சேர்ந்த பிச்சையா மகன் காளைமுத்து என்ற காளைமுத்துப் பாண்டி (50). டிரைவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் இருந்தார். அப்போது, 3 பேர் வந்து சவாரிக்காக அவரை அழைத்துச் சென்றனராம்.
இந்நிலையில், காளைமுத்துப்பாண்டி அத்தைகொண்டான் கண்மாய்க் கரை மயானம் அருகே தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மயங்கிக் கிடந்ததாகவும், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் அவரது சகோதரர் ரமேஷுக்கு செல்லத்துரை என்ற செல்வம் தகவல் தெரிவித்தாராம். அதன்பேரில், ரமேஷ் மருத்துவமனைக்குச் சென்று காளைமுத்துப் பாண்டியைப் பார்த்தார்.
பின்னர், தனது அண்ணனைத் தாக்கி ஆட்டோவை கடத்திச் சென்றோர் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, தூத்துக்குடி முனியசாமி கோயில் தெரு சுப்பிரமணியன் மகன் ஆட்டோ டிரைவர் ராமலட்சுமணன் (29), ஆசாரிவிளை தெரு ஜோன்ஸ்ராஜ் மகன் தேவராஜன் என்ற சாம் (26), நந்தகோபாலபுரம் பிரதான சாலை கந்தையா மகன் கோகுல்ராம் என்ற கானா கோகுல்ராம் என்ற விஜி (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








