» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் ஒருவர் பலி : நண்பர் படுகாயம்!

சனி 15, பிப்ரவரி 2025 9:51:27 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுப்பையா (65), இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராஹிம் (63), என்பவர் உடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சிருக்கு சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி பாலம் தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் காயம் அடைந்த சுப்பையா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செய்யது இப்ராஹிம் சிகிச்சைகாக  ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory