» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நூதன முறையில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் அருகே கோமானேரியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி இசக்கியம்மாள் (29). இவர் இன்று காலை சமையல் செய்து கொண்டிருந்த போது டிப் டாப் உடை அணிந்த இளைஞர் அவரை அணுகி நீங்கள் எங்கள் கம்பெனியில் ஏற்கனவே பணம் முறையாக கட்டி பொருட்களை வாங்கி உள்ளதாகவும், முறையாக கட்டியதால் உங்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு விழுந்து உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அதற்கு பணம் கட்டினால் பரிசு தருகிறோம் என கூறியுள்ளார் அதற்கு எனது தம்பியிடம் கேட்டு பதில் சொல்கிறேன் என அவர் கூறியதோடு தனது தம்பிக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் பேசிக் கொண்டிருக்கும் போதே டிப்டாப் உடை அணிந்த இளைஞர் நான் உங்களது தம்பியிடம் பேசி பரிசு பொருள் தருகிறேன் என அவரது கைபேசியை வாங்கி உள்ளார்.

பின்னர் அவரது தம்பியிடம் பேசுவது போல் அவரது கைபேசியை எடுத்துக் கொண்டு வந்த பைக்கில் தலைமறைவாகிவிட்டார். தனது கைபேசியை பறி கொடுத்த அந்தப் பெண் கூச்சலிடவே அக்கரும் பக்கத்தில் உள்ளவர்கள் டூவீலரில் அந்த மர்ம நபரை விரட்டி உள்ளனர் ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் எஸ்ஐ எட்வின் தலைமையில் போலீசார் கோமானேரி விரைந்து விசாரணை நடத்தினர்.

அங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அடுத்தடுத்து இளைஞர் சென்ற இடங்களை தேடி சென்றனர். இதனையடுத்து விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடுவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கனகராஜ் (37) என தெரியவந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory