» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

தூத்துக்குடியில், சிவன் கோவில் எனப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, சுவாமி- அம்பாள் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள சுந்தர பாண்டிய விநாயகா் ஆலயத்தில் இருந்து எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ருத்ர ஜெபம், மூல மந்திரம், பால மந்திரம் ஹோமம், மஹா அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து இரவு சுவாமி - அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகா், அருள்மிகு பாகம்பிரியாள், அருள்மிகு சங்கர ராமேஸ்வரா் ஆகியோா் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
