» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி மையம் : ஜூனில் பணிகள் துவக்கம்?

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:02:43 PM (IST)



கோவில்பட்டியில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி மையம் அமைக்கும் பணிகள்  வரும் ஜூன் மாதத்திற்குள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின் புதூர், தோணுகால் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று விமான ஓடுதளம் அமைத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக விமான ஓடுதளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி 10 பயிற்சி விமானங்களை இயக்க முடியும். 

இந்நிலையில், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான ‘டிட்கோ’ கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சில நிறுவனங்களிடம் டிட்கோ நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளன. இதையடுத்து, பயிற்சி மையத்துக்காக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை டிட்கோ மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள் கோவில்பட்டியில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி மையம் தொடங்கப்படும் என தெரிகிறது. 

நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கி.மீ நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. கோவையைச் சேர்ந்த லட்சுமி மில்ஸ் நிர்வாகம் சார்பில், தங்களது தனி விமானத்தை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. கோவில்பட்டியிலும் லட்சுமி மில்ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

செஸ்னா வகை சிறிய ரக விமானத்தில் வந்து சென்றுள்ளனர். இன்னும் வேறு சிலரும் இந்த ஓடுதளத்தைப் பயன்படுத்தி வந்தனர். இரு கிராமங்களில் 63 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளம், 1998ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory