» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
“உன்னால் முடியும்” தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி: 10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:03:22 PM (IST)

நாகலாபுரத்தில் 10ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான "உன்னால் முடியும்” எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் கம்மவார் திருமண மண்டபத்தில் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சி குழு சார்பாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான உன்னால் முடியும் ஜெயித்துக் காட்டு என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழு தலைவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கடந்தாண்டு 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. செயலாளர் கிருஷ்ண பரமாத்மா, பொருளாளர் தேவராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கந்தவேல்சாமி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை இணைச்செயலாளர் சேகர் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவில் அனைவருக்கும் அருஞ்சுவை உணவுவழங்கப்பட்டது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
