» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:58:40 AM (IST)

தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 2-ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அடைக்கப்படவில்லை. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கால சந்தி பூஜை, விளா பூஜை, சுப்பிரமணிய பூஜை நடந்தது. இதையடுத்து கோ ரதத்தில் விநாயகர் பெருமானும், சட்ட ரதத்தில் சுவாமி கழுகாசல மூர்த்தி, வள்ளி. தெய்வானை அம்மன்களுடன் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)








